வியாழன், 20 அக்டோபர், 2011

எனது போதிமரம்

 
நான் என்னை உணரத் தெரிந்தபோது
என் மனதிற்குள் நான் வரைந்த ஓவியம் ..
என் மனதில் மின்னி இன்னும் மறையாமல்
இருக்கும் மின்னலை நேரில் கண்டேன் ...
அந்த இனியக்குரலின் ரீங்காரம்
விரல் மீட்டிய வீணையின் இசையாக
என் இதயத்தை வருடிக்கொண்டிருக்கிறது ...
அந்த ஓவியத்தோடு நான் நடந்து போன இடங்கள்
என் நினைவுகளை பசுமையாக வைத்திருக்கிறது
உறங்கும் போதும் ஓசையை எனக்கு உணர்த்தியவள்
இன்றும் நான் உணர்ந்து கொண்டுஇருக்கிறேன்
மலர்ந்த முகத்துடன் இருக்க கற்றுக்கொடுத்தவள்
கவலை வந்தால் இன்றும் உன் முகம் தான் என் முன்...
அந்த நினைவுகளை கொண்டே
இனி எனது பிறப்புகள் இருக்கும் 

- கவிஞர்  சுந்தர்
 

ஹைக்கூ




கடவுள் வரைந்த 
காட்சிக்கவிதை 
குழந்தை


                                
                           -"கவிஞர்" கி .அன்பு


   
 

செவ்வாய், 18 அக்டோபர், 2011

வரவேற்பு

         தமிழ் இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
                                           "  கவிப்புயல்  "  கி.அன்பு


        இது உங்களுக்கான இணைய தளம் ,இதில்  உங்களுடைய கவிதை ,கட்டுரை, நகைச்சுவை ,  போன்ற பலவிதமான பகுதிகளை இணைக்கலாம் . நீங்கள் எழுதியதை நேரடியாக என் மினஞ்சல்{ஈமெயில்}
              முகவரிக்கு அல்லது வீட்டு முகவரிக்கு அனுப்பலாம் .


மினஞ்சல்         :         kavinger.ki.anbu@gmail. com
வீட்டு முகவரி :         கவிஞர் கி.அன்பு
                                      105/o, இரயில்வே  காலனி ,
                                      காட்பாடி -632007
                                      வேலூர்  மாவட்டம்

                                      9894577757

அலுவலக முகவரி : பேராசிரியர்  கி.அன்பு,
                                      தமிழ்த்துறை,
                                      அ.மா .ஜெயின் கல்லூரி,
                                      மீனம்பாக்கம் ,சென்னை -114